மதுரை: கூடல் புதூர் அசோக் நகர் 2ஆவது தெருவில் பாதாள சாக்கடை தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச்சேர்ந்த தொழிலாளி சக்திவேல் எதிர்பாராத விதமாக தோண்டப்பட்ட குழியின் உள்ளே தவறி விழுந்தார்.
கடந்த சில நாட்களாக மதுரை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்துவரும் நிலையில் புலிகள் அனைத்திலும் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஆகையால், தவறி விழுந்த தொழிலாளி சக்திவேல் உயிரிழந்திருக்கலாம் என சகத்தொழிலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தொழிலாளியின் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குழிக்குள் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் கூடல் புதூர் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருட்டு பைக்கில் ஐந்து பேர் பயணம்; போக்குவரத்து போலீசார் விசாரணை..