விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 60 வயது முதியவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த நபர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரின் ரத்தம், சளி ஆகியவை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு 40 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சிகிச்சை செய்து வந்தனர். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் வேண்டுகோளின் பேரில் அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே அந்த நபர் நோய் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், அந்த முதியவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்த மருத்துவர் மற்றும் இரண்டு செவிலியருக்கு கரோனா தோற்று அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று பேருக்கும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அம்பேத்கர் பிறந்தநாள்: முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை