ETV Bharat / state

மதுரையில் ஒரே நாளில் 594 கிலோ  புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 594 kg gutga seized in madurai and three were arrested

மதுரை: மதுரை மேலக்கோட்டைப் பகுதியில் 594 கிலோ எடை அளவிலான தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்  மதுரையில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்  மதுரை மாவட்டச் செய்திகள்  594 kg gutga seized in madurai and three were arrested  மதுரை மேலக்கோட்டையில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
மதுரையில் 594 கிலோ அளவில் தடை செய்யப்பட்ட புகையிலை வஸ்துகள் பறிமுதல்
author img

By

Published : Feb 28, 2020, 11:24 AM IST

மதுரை மாவட்ட திருமங்கலம் அருகே வாகன சோதனையின் போது, அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருமங்கலம் கப்பலூர் பகுதியில் சார்பு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஓ. ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்தரசு(34) என்பவரை நிறுத்தி சோதனையிட்டபோது, அவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மேலக்கோட்டையைச் சேர்ந்த பாபுஜி (33), மதுரை முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (53) ஆகியோரிடமிருந்து பொருட்களை வாங்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மேலக்கோட்டை பைகாரா பகுதியில் பாபுஜி என்பவரது வீட்டில் சோதனையிட்ட காவலர்கள், 594 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் விற்பனை செய்து வைத்திருந்த பணம் 16ஆயிரத்து 440 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

மதுரையில் 594 கிலோ அளவில் தடை செய்யப்பட்ட புகையிலை வஸ்துகள் பறிமுதல்

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இந்த போதை வஸ்துகள் எங்கிருந்து வந்தது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் 594 கிலோ கிராம் போதை வஸ்துகள் கைப்பற்றப்பட்டது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெங்களூரு நகை வியாபாரிகளிடமிருந்து கணக்கில் வராத ரூ.21 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.