ETV Bharat / state

3 டன் போலி சிகரெட் பண்டல்கள் பறிமுதல் - police officers

சாக்லேட் பண்டல்களுடன் மறைத்து தென் மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்படவிருந்த மூன்று டன் போலி சிகரெட் பண்டல்களை மதுரை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

3 டன் போலி சிகரெட் பண்டல்கள் பறிமுதல்
3 டன் போலி சிகரெட் பண்டல்கள் பறிமுதல்
author img

By

Published : Jul 30, 2021, 10:09 AM IST

மதுரை: மாவட்டத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு குட்கா, புகையிலைப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுவதாக காவல் துறையினருக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன.

அவற்றின் அடிப்படையில் மாவட்டக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் ஐந்திற்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் முன்னதாக ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

ரகசியத் தகவல்

இந்த நிலையில் முனிசாலை இஸ்மாயில்புரம் ஆறாவது தெருவில் தனியாருக்கு சொந்தமான குடோனில் சட்டவிரோதமாக குட்கா, புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற தனிப்படை காவல் துறையினர், பன்னீர் செல்வம் என்பவருக்கு சொந்தமான இரண்டு குடோன்களில் இன்று (ஜூலை.30) அதிரடியாக சோதனை செய்தனர்.

இதில் 1200க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் சுமார் மூன்று டன் அளவிலான அங்கீகரிக்கப்படாத போலி சிகரெட் பண்டல்கள் இருப்பது தெரிய வந்தது.

குடோன் உரிமையாளர் தலைமறைவு

அதனைத் தொடர்ந்து போலி சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், குடோன் கண்காணிப்பாளர் பிரபுவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குடோன் உரிமையாளர் பன்னீர் செல்வம் சாக்லேட் பாக்கெட்டுகளை விற்பனை செய்வது போன்று புகையிலை, போலி சிகரெட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் பன்னீர் செல்வத்தை தனிப்படை காவல் துறையினர் தற்போது தேடி வருகின்றனர்.

இந்நிலையில், குற்றச் செயலை கண்டுபிடித்து சிறப்பாக பணியாற்றிய விளக்குத்தூண் உதவி ஆணையர் சூரக்குமார், காவல் ஆய்வாளர் லிங்கபாண்டி, தனிப்படை காவல் துறையினர் ஆகியோரை காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: கலெக்‌ஷன் பணம் சுமார் ரூ.12 லட்சம் திருட்டு - சிக்கிய ஊழியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.