மதுரை கீழமாரட் வீதியில் ராஜாராம் என்பவருக்கு சொந்தமான உயர்தர உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்த உணவகத்தில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு தல்லாகுளம், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் உணவகத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் சின்னச்சாமி மட்டும் ராஜேந்திரன் இருவருக்கும் சிறியளவில் தீக்காயம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, இருவரும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. முதற்கட்ட விசாரணையில் சிலிண்டரின் எரிவாயு குழாய் வெடிப்பின் காரணமாக தீப்பற்றியது என தெரியவந்தது.
இந்த தீ விபத்து தொடர்பாக விளக்குத்தூண் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.