மதுரையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11 ஆயிரத்து 593 பேரில், 9 ஆயிரத்து 219 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி 267 பேர் உயிரிழந்தனர்.
மதுரையைப் பொறுத்தவரை மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களைத் தொடர்ந்து நடத்திவருகின்றன. அதேபோன்று பரிசோதனை எண்ணிக்கையும் நாளொன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.