கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குரும்பதின்னா என்னும் இடத்தில் இருசக்கர வாகனங்கள், மோட்டார் உதிரிப் பாகங்கள் ஆகியவை தொடர்ந்து திருடு போவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், உதிரி பாகங்களை திருடி குடோனில் பதுக்கி வைத்த நான்கு பேரை பொதுமக்கள் பிடித்துள்ளனர்.
தொடர்ந்து அப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களையும் அதன் சில உதிரி பாகங்களையும் விற்று காசாக்கி செலவழிப்பது இவர்களின் வாடிக்கையாக இருந்துள்ளது. இந்நிலையில், பல மாதங்களாக தேடப்பட்டு வந்த இவர்களை பொதுமக்கள் பிடித்து உத்தனப்பள்ளி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.