ETV Bharat / state

ஓசூர் பால் வியாபாரி கொலை வழக்கு; இருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை!

Milk dealer murder case: ஓசூர் அருகே பால் வியாபாரியை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவத்தில், இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவர் கைது
ஒசூர் பால் வியாபாரி கொலை வழக்கு.
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 12:17 PM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த பாகலூர், எலுவப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர், முனிராஜ் (40). பால் வியாபாரம் செய்து வரும் இவர், கடந்த ஜனவரி 6ஆம் தேதி இரவு 10 மணியளவில், பாகலுருக்குச் சென்றுவிட்டு, தனது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில், அவரை வழிமறித்த மர்ம நபர்கள், சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு, தப்பிச் சென்றனர். இதில், முனிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து, அவ்வழியாகச் சென்றவர்கள் பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த முனிராஜ் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து, கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து, கொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், பால் வியாபாரியை கொலை செய்த மர்ம நபர்கள் பாகலூர் அருகே ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சென்ற தனிப்படை போலீசார், அங்கிருந்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய இந்த விசாரணையில், பால் வியாபாரியை கொலை செய்தவர்கள் எலுவப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மது (32) மற்றும் மதுவின் சித்தி மகன் விஜயகுமார் (27) என தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், மதுவின் அம்மா சாந்தம்மா என்பவரது ஒரு ஏக்கர் 20 செண்ட் நிலத்தை, கடந்த 2011ஆம் ஆண்டு முனிராஜின் தந்தை கோபலப்பா முறைப்படி விற்று கொடுத்துள்ளார். ஆனால், நிலம் போலியாக ஆவணம் செய்து விற்றதாக, மது குடும்பத்தினர் கோபலப்பா குடும்பத்தினரிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கோயில் நிலம் குத்தகை எடுப்பதிலும், இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், தொடர்ந்து கோபலப்பா தொந்தரவு செய்து வருவதாக கருதிய மது, தனது சித்தி மகன் விஜயகுமாரிடம் தெரிவித்துள்ளார். இதனால், இருவரும் சேர்ந்து கோபலப்பாவை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர். ஆனால், அவர் வயதானவர் என கருதிய மது மற்றும் விஜயகுமார், அவரது மகன் முனிராஜை கொலை செய்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பால் வியாபாரி முனிராஜை கொலை செய்த இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: “நான் எலும்பு மருத்துவர்.. என்னால் பார்க்க முடியாது” - காய்கறி கடையை ஒப்பிட்டு பேச்சு.. வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.