ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், தலா ஆயிரம் ரூபாய் நிவாரத்தினை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மாற்றுத்திறளாளி தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 39 ஆயிரத்து 637 நபர்களுக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று நிவாரணத் தொகையினை வழங்கி வருகின்றனர். ஜூன் 29ஆம் தேதி தொடங்கிய இந்தப் பணியானது ஜூலை 7ஆம் தேதி வரை தொடரும்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் குருபரபள்ளியில் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே நேரடியாக சென்று ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க:பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் கந்தசாமி