ETV Bharat / state

Krishnagiri - ஐ.டி.பார்க்குக்கு நிலமெடுக்க எதிர்ப்பு - வீடுகளில் கருப்புக்கொடிகளை கட்டி போராடிய மக்கள் - பட்டா

தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்க ஒரு கிராமம் உட்பட 1000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த இருப்பதாக வெளியான தகவலையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில கிராம மக்கள் வீடுகள்தோறும் கருப்புக்கொடிகளைக் கட்டி எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

protest
வீடுகளில் கருப்புக்கொடிகளை கட்டி போராட்டம்
author img

By

Published : Jul 12, 2023, 6:10 PM IST

வீடுகளில் கருப்புக்கொடிகளை கட்டி வினோத போராட்டம்

கிருஷ்ணகிரி: ஓசூர் தாலுகா, சென்னசந்திரம் ஊராட்சியில் உள்ள 5 கிராமங்களில் நில உச்ச வரம்புச் சட்டம் அமல்படுத்திய பிறகு 2500 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பட்டா இல்லாத நிலங்களை, பைமாசி நிலம் என அழைக்கும் நிலையில் 2018ஆம் ஆண்டு பைமாசி நிலத்திற்கு பட்டா வழங்கிட தனியாக மாவட்ட வருவாய் அதிகாரி மூலம் நிலவரித் திட்டம் என்கிற துறையை உருவாக்கி 3 தாசில்தார்கள் பட்டா வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில் தமிழ்நாடு அரசு உளியாளம் கிராமம் மற்றும் 5 கிராமங்களை உள்ளடக்கி, 1000 ஏக்கர்களை கையகப்படுத்தி தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்க இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருப்பது கிராம மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இக்கிராமங்களில் சுமார் 8000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், பல தலைமுறைகளாக வீடுகள் கட்டி, விவசாயம் செய்து வரும் நபர்களுக்கு பட்டா இல்லை என்பதாலும், ஐ.டி. பார்க் ஒட்டிய நிலம் என்பதாலும் 'அரசு டெக் பார்க்' அமைக்க திட்டமிட்டுள்ளது. பைமாசி நிலத்திற்கு அரசு சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது அரசின் நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் உளியாளம் கிராம மக்கள் கிராமத்திலுள்ள தங்கள் வீடுகள் மற்றும் நிலங்களுக்கு பட்டா கேட்டும், தொழில் நுட்பவியல் பூங்கா அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தும் வீடுகள்தோறும் கருப்புக் கொடிகளை கட்டி உள்ளனர்.

இது குறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட விவசாயிகள் பேசுகையில்; பட்டா வழங்க எங்களிடம் ஆவணங்களை பெற்ற அதிகாரிகள் தற்போது எங்களை காலி செய்ய கூறுவது என்ன நியாயம்? என்றும்; அரசு எங்களுக்கான நிலம் மற்றும் வீடுகளுக்கு பட்டா வழங்கவில்லை என்றால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் அரசு வழங்கிய ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டை போன்ற அரசு சம்பந்தப்பட்ட ஆவணங்களை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:"அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு" - முதலமைச்சர் மத்திய அமைச்சருக்கு கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.