கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி மூக்கண்டப்பள்ளி பகுதியில் திமுகவின் 2 ஆண்டுகள் ஆட்சியின் சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரகாஷ், ஓசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பங்கேற்று உறையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “ஆளுநருக்கு மரியாதையாக சொல்லிக்கொள்கிறேன், கிராமப் பகுதிகளில் ‘இலை எடுப்பவன் இலையை மட்டும் தான் எடுக்கனும், எண்ணக்கூடாது’ என்பார்கள். ஆளுநருக்கு எடுக்கிற பதவிதானே தவிர, எண்ணத் தொடங்கினால் ஆளுநரின் அண்ட சராசரங்கள் வெளியே வந்துவிடும்.
ஒரு கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டவர்களை விட, 5 கோடி ரூபாய்க்கு ராஜ்பவனில் டீ, காபி சாப்பிட்ட ஆர்.என். ரவி எங்களை பார்த்து பேசுவதா?. திமுகவை எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” என பேசினார். கொட்டும் தூறல் மழையிலும் ஏராளமான பெண்கள் குடைபிடித்து ஆர்.எஸ். பாரதியின் பேச்சைக் கேட்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு