கிருஷ்ணகிரி நகரில் ராயக்கோட்டை சாலையில் பிரபலமான உணவகம் உள்ளது. இந்த உணவகத்துக்கு, கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரில் நான்கு இளைஞர்கள் வந்தனர். அவர்கள் உணவகம் முன் காரை நிறுத்தும்போது, திடீரென காரில் இருந்து புகை வெளியேறியது.
அதிலிருந்து இறங்கிய இளைஞர்கள், காரின் பேனட்டை திறந்தபோது, அதிலிருந்து மளமளவென புகை வெளியேறி, தீப்பற்றியது. இதைப்பார்த்த உணவக ஊழியர்கள், அக்கம் பக்கத்தினர் சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதற்கிடையில் காரில் வந்த நபர்கள் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.
வாகனத்தின் ஆவணங்கள் இல்லாததால் காவல் துறையினருக்கு பயந்து அவர்கள் தப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது. கார் தீப்பற்றிய காட்சி உணவகத்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை வைத்து கிருஷ்ணகிரி நகர காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: