கிருஷ்ணகிரி: ஆங்கிலேயர்களால் குட்டி இங்கிலாந்து என்று அழைக்கப்பட்ட ஓசூர் பகுதி பெரும்பாலும் குளிர்ச்சியாகவே காணப்படும். குளிர்க்காலங்களான நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர் அதிகரித்து வாட்டி வதைக்கும். இந்த ஆண்டில் நவம்பர் மாதத்தில் பனியின் தாக்கம் இல்லாமல் இருந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் படிப்படியாக பனிப்பொழிவு அதிகரித்தது.
இம்மாத தொடக்கத்தில் மழை பொழிவதை போல் பனிப்பொழிவு காணப்படுகிறது. இன்று (ஜனவரி 9) அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. அதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஊர்ந்து சென்றன.
பனிப்பொழிவால் அருகில் செல்லும் வாகனங்கள் கூட தென்படாதவாறு, பனி பொழிந்தது. அதேபோல பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையும் படிங்க: ஓசூரில் குடியிருப்பு அருகே கிடந்த மனித எலும்புக்கூடுகள்