கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சுத்தமான, சுகாதாரமான (RO) குடிநீர் வழங்கவேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
கிராம மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று பர்கூர் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 8 லட்சம் மதிப்பீட்டில் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு மையத்தின் திறப்பு விழா மற்றும் ஆர்.ஒ. குடிநீர் வழங்கும் விழா நடைபெற்றது.
சின்னமட்டாரப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் கலந்துகொண்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார், சுமார் ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட இந்த சுத்திகரிப்பு மையத்தின் மூலமாக பொது மக்களுக்கு குடி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் நீண்ட நாள் குடிநீர் பஞ்சத்தை போக்கி சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டதற்கு சின்னமட்டாரப் பள்ளி கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அப்போது சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், வரட்டனப்பள்ளி கூட்டுரவு சங்க தலைவர் வெற்றி செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர் பிரகாஷ், முன்னால் ஒன்றிய குழு உறுப்பின் சின்னராஜ், ஒப்பந்ததாரர் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி!