ETV Bharat / state

பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் சமூக ஆர்வலர் முகிலன் அறிவிப்பு - latest karur district news

தமிழர் விரோத போக்கை கடைப்பிடித்துவரும் பிரதம் மோடி, தாராபுரத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு வரும்போது கறுப்புக்கொடி காட்டுவோம் என சமூக ஆர்வலர் முகிலன் தெரிவித்துள்ளார்.

we-will-show-a-black-flag-to-prime-minister-modi-says-social-activist-mugilan
பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம் சமூக ஆர்வலர் முகிலன் அறிவிப்பு
author img

By

Published : Mar 29, 2021, 5:12 PM IST

கரூர்: மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முனைப்புக் காட்டிவருவதை தமிழ்நாடு அரசு கண்டிக்கவேண்டும் என வலியுறுத்தி இன்று கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சமூக ஆர்வலர் முகிலன் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தமிழ்நாடு அமைச்சரவையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றியும் ஏழு தமிழர் விடுதலை குறித்து ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

எழுவர் விடுதலையை பிரதமர் மோடி தடுக்கிறார் என நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே, தமிழ்நாடு சுற்றுச்சூழல் கூட்டமைப்பு சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை தாராபுரத்தில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். கர்நாடகத்தில் ஆளும் பாஜக 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதற்கு பல்வேறு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரி டெல்டா விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் சமூக ஆர்வலர் முகிலன் அறிவிப்பு

தமிழ்நாட்டில், நியூட்ரினோ திட்டம், எட்டுவழிச்சாலை திட்டம் என மக்கள் விரோத திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்த்த கெயில் குழாய் பதிப்புத் திட்டம், உயர்மின் கோபுரம் பதிக்கும் திட்டம், எரிவாயு பெட்ரோல் குழாய்களைப் பதிக்கும் திட்டம் ஆகியவற்றை அவசரமாக தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு அமல்படுத்திவருகிறது.

தமிழ்நாட்டின் உரிமையாக இருந்த கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தமிழர்களுக்கே முன்னுரிமை என்பதை அதிமுக அரசு மாற்றியுள்ளது. தமிழர் விரோத போக்கை கடைபிடித்துவரும் மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: மோடிக்கு கருப்புக்கொடி! - தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.