ETV Bharat / state

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் கொந்தளித்த பெண்மணி...! - வாக்களிக்கும் உரிமை

கரூர்: வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாததால் வாக்களிக்கும் உரிமையை தாருங்கள் இல்லை என்றால் நான் கட்டிய வரி பணம் அனைத்தையும் திருப்பி வழங்குங்கள் என வாக்காளர் கொந்தளித்த சம்பவம் வாக்குச்சாவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொந்தளித்த வாக்காளர்
author img

By

Published : Apr 18, 2019, 7:06 PM IST

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள காந்திகிராமம் பகுதியில் வாக்குச்சாவடி எண் 85-ன் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது கனிமொழி என்ற வாக்காளர் தனது பெயரும், தனது மகனின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் ஆவேசமடைந்தார்.

இதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்த பலனும் இல்லாததால் ஆவேசமடைந்த அவர் இதுபற்றிச் செய்தியாளர்களிடம் கூறும்போது, தேர்தல் ஆணையம் 100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. ஆனால் இதுபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களிக்க முடியாதபோது என்ன செய்வது எனக் கேள்வியெழுப்பினார்.

இதே வாக்குச்சாவடியில் இறந்த 25 பேரின் பெயர்கள் வாக்காளர் படிவத்தில் உள்ளன. ஆனால் எனது பெயரும், எனது மகனின் பெயரும் விடுபட்டுள்ளது என வேதனை தெரிவித்தார். மேலும் நான் அரசிற்கு எல்லா விதமான வரிகளையும் செலுத்தி வருகிறேன் எனக்கு வாக்குப்பதிவு அளிக்கும் உரிமையை தாருங்கள் இல்லையென்றால் நான் கட்டிய வரிப்பணத்தை திரும்ப வழங்குங்கள் என காட்டமாகக் கூறினார்.

Intro:வாக்களிக்கும் உரிமையை தாருங்கள் இல்லை என்றால் நான் கட்டிய வரிகள் அனைத்தையும் திரும்ப அளியுங்கள்- வாக்காளர்

Body:கரூர் நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள காந்திகிராமம் பகுதியில் வாக்குச்சாவடி எண் 85 இன் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் பல்வேறு கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

அதே சூழலில் அங்கு வசித்து வருபவர் கனிமொழி அவர் ஒரு சில மாதங்களாக கரூர் அருகே வெங்கமேடு பகுதியில் ஒரு வருட காலமாக குடியேறி இருந்து தன் குடும்பத்தை நடத்தி வருகிறார். அவர் தனது பிறந்த ஊரான காந்திகிராமத்தில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வந்தார் அப்போது வாக்காளர் படிவத்தில் அவர் பெயரும் அவருடைய மகன் பெயரும் இல்லை என்பதை அங்கு இருக்கும் தேர்தல் பணி அலுவலர்கள் கூறியதும் அதிர்ச்சி அடைந்தார் மேலும் இது சம்பந்தமாக புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாததால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது etv பாரத் செய்திகளுக்கு பிரத்தியோக பேட்டி அளித்தார்.

தனது குடும்ப சூழ்நிலையால் தனது சொந்த ஊரை விட்டு சிறிது காலம் மற்றொரு பகுதியில் குடும்பத்தை நடத்தி வருகிறேன் மேலும் வெளிநாடு வெளி ஊரிலிருந்து வந்து வாக்கு பதிவு செய்துவிட்டு திரும்புகின்றனர் ஆனால் எனக்கு அருகில் இருந்தும் வாக்குப்பதிவு இல்லை நான் அரசிற்கு எல்லா விதமான வரிகளையும் செலுத்தி வருகிறேன் எனக்கு வாக்குப்பதிவு அளிக்கும் உரிமையை தாருங்கள் இல்லையென்றால் நான் கட்டிய வரி திரும்ப அளியுங்கள் என்று கூறினார்.

மேலும் எனது குடும்பத்தில் என் கணவருக்கு வாக்களிக்கும் தகுதி இருக்கிறது ஆனால் எனக்கும் எனது மகனுக்கும் பெயர் இடம்பெறவில்லை. இது எப்படி சாத்தியமாகும் என்று கேள்வியும் முன்வைக்கிறார்.

அதிகாரிகள் அலட்சியமாக இருந்து செயல்படுத்தி வருகின்றனர். புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும் நாளை வந்து மனு கொடுத்து விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அதிகாரிகள் அலட்சியமாக கூறுகின்றனர் நாளைக்கு கொடுத்து சரி செய்தாலும் எனது ஜனநாயக கடமையை ஆற்ற தவறியதாக கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.