ETV Bharat / state

வருவாய் துறை ஊழியர்களுக்கு உயிர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் - வலியுறுத்தும் ஊழியர்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 3:50 PM IST

Tamil Nadu Revenue Department Officers Association Convention: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில், வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வருவாய் துறை ஊழியர்களுக்கு உயிர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன்

கரூர்: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் 4வது மாவட்ட மாநாடு கரூர் ஆர்த்தி ஹோட்டலில் உள்ள அழகம்மை மஹாலில் நேற்று (டிச.3) கரூர் மாவட்ட தலைவர் வைரபெருமாள் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஓ.பி.ஆர் செந்தில் வரவேற்புரை ஆற்ற, மாவட்ட துணை தலைவர் மோகன்ராஜ் அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார்.

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சங்கரலிங்கம் துவக்க உரை நிகழ்த்த, கரூர் மாவட்ட செயலாளர் ஆர்.சண்முகம் மாநாட்டு அறிக்கையினை வாசித்தார். இதனைத் தொடர்ந்து மாநில நிதி அறிக்கையினை மாவட்ட பொருளாளர் சந்துரு வாசித்தார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவரும், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.எஸ் அன்பழகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணை தலைவர் செல்வராணி, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.

தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிணைப்பு மாவட்ட தலைவர் மகேந்திரன், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் பொன்.ஜெயராம் ஆகியோர் மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டின் நிறைவாக தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் எம்.பி முருகையன் மாநாட்டு நிறைவுறை நிகழ்த்தினார்.

இதனை அடுத்து, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, வருவாய் அலுவலக சங்கத்தின் அறுபதாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, வருகிற டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில், வைர விழா ஆண்டு மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இதன் முன்னோட்டமாக தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் மாவட்ட மாநாடுகல் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் 4வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வருவாய் துறை ஊழியர்களுக்கு உயிர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்.

வருவாய் துறை ஊழியர்களுக்கு பணியில் இருக்கும் பொழுது இறப்பு ஏற்பட்டால், விபத்து நிவாரண உதவி தொகையாக 50 லட்சம் ரூபாய் வழங்கிட வேண்டும். கரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சரண் விடுப்பினை உடனடியாக வழங்க வேண்டும். பஞ்சாப், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வழங்கப்பட்டதை போல தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: “ஒற்றைச் சான்றிதழ் இல்லாததால் இரண்டு தலைமுறைகள் அழிந்து விட்டது” - கொங்குநாடு வேட்டுவர் கவுண்டர் முன்னேற்ற சங்கத்தினர் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.