ETV Bharat / state

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஜவுளிகள் தேக்கம்! - தேக்கமடைந்த ஜவுளி பொருள்கள்

கரூர்: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி பொருள்கள் தேக்கமடைந்துள்ளதால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஏற்றுமதி சங்க தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தெரிவித்துள்ளார்.

டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஏற்றுமதி சங்க தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து

author img

By

Published : May 27, 2020, 11:24 PM IST

கரூர் மாவட்டத்தில் பிரதான தொழில்களில் முக்கியமானது டெக்ஸ்டைல்ஸ் உற்பத்தி. இந்த தொழில் மூலம் கரூரில் பல ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் அன்றாடம் பிழைப்பை நடத்தி வருகின்றனர். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

கரூர் மாவட்டத்தில் ஓரளவு தளர்வு இருந்தாலும் கிராமப்புறங்களில் மட்டுமே 100 விழுக்காடு தொழில் நடைபெற்றுவருகிறது. ஆனால், கிராமப்புறங்களில் டெக்ஸ்டைல்ஸ் தொழில் குறைவாக இருக்கிறது. இருப்பினும் நகர்ப்புறங்களில் இருக்கும் மக்கள் இந்த தொழிலை அதிகம் செய்துவருகின்றனர்.

இது குறித்து டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஏற்றுமதி சங்க தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, ஈடிவி பாரத் செய்தியாளருக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது, “கடந்த 40 நாள்களாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் ஜவுளி பொருள்களில் 25 விழுக்காடு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. பலசரக்குகள் கப்பலின் தேக்கமடைந்திருக்கின்றன. எங்களுக்கு கொடுத்த ஆர்டர்கள் மூன்று மாதங்களாக நிலுவையில் உள்ளது. இதன் மூலம் தொழில் மிகுந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது.

ஜவுளிகளின் ஏற்றுமதி பாதிப்பு குறித்து பேசிய தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து

மேலும், ஒவ்வொரு டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர்களுக்கும் 10 விழுக்காடு வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரூரை பொறுத்தவரை டெக்ஸ்டைல்ஸ் தொழில் 100 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் வரை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன். இதுபோன்ற நிலை தொடர்ந்து நீடித்தால் வேலைவாய்ப்பு மக்களுக்கு அளிக்க முடியாது. இதன் மூலம் மக்கள் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

இதையும் படிங்க: கோவையில் ஜவுளி கடைகளுக்கு சீல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.