ETV Bharat / state

தேச துரோக வழக்கை கண்டு அஞ்சவோ, பின்வாங்கவோ மாட்டேன்..! - முகிலன் - முகிலன்

கரூர்: மண்ணையும், மக்களையும் பாதுகாக்க போராடும் என்மீது போடப்படும் வழக்குகளை கண்டு அஞ்சவோ, பின்வாங்கவோ மாட்டேன் என சுற்றுப்புற சூழல் போராளி முகிலன் தெரிவித்துள்ளார்.

முகிலன்
author img

By

Published : Aug 10, 2019, 1:55 AM IST

பொதுமக்களின் நலனுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராகவும், சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கப் போராடி வருபவர் முகிலன். இவர் மீது கடந்த 2017ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள, சீதப்பட்டி பகுதியில் நடைபெற்ற தெருமுனை பரப்புரைக் கூட்டத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்குத் தொடுக்கப்பட்டது.

இது போல் இன்னும் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வரும் சமூகப் போராளி முகிலன். திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இன்று இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய வழக்கில் திருச்சி மத்தியச் சிறையிலிருந்து முகிலனை, கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்குக் காவல்துறையினர் அழைத்து வந்து முன்னிறுத்தினர்.

இவ்வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் கோபிநாத் வரும் 19ஆம் தேதி முகிலனை நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை காவல்துறையினர் பாதுகாப்பாக மத்தியச் சிறைக்குக் கொண்டு சென்றனர். நீதிமன்றத்திற்கு அழைத்துவப்பட்ட முகிலன் செய்தியாளர்களைப் பார்த்துக் கூறும் போது, கரூர் மாவட்டத்தில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராகக் கடுமையாகப் போராடியதின் விளைவாக, தற்போது மணல் கொள்ளை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் எனக்குத் துணையாக இருந்த காரணத்தினாலும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஐ.ஜி. மற்றும் டி.ஐ.ஜி ஆகியோருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி வெளிப்படுத்த இருந்த விஸ்வநாதன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இதுபோன்று எத்தனை நெருக்கடி கொடுத்தாலும், அதனை நாங்கள் சந்திப்போம் என்ற அவர் மண்ணையும், மக்களையும் பாதுகாக்கப் போராடும் என் மீது தேசத் துரோக வழக்கைப் பதிவு செய்யும் அடக்குமுறையை எதிர் கொண்டு தான் இருக்கிறேன். இதற்காக அஞ்சவோ, பின் வாங்கவோ மாட்டேன் என்றார்.

Intro:

மண்ணையும் மக்களையும் பாதுகாக்க போராடும் என் மீது தேச துரோக வழக்கை பதிவு செய்யும் அடக்குமுறையை எதிர் கொண்டு தான் இருக்கிறேன்.இதற்க்காக அஞ்சவோ பின் வாங்கவோ மாட்டேன்.கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட
சுற்றுபுற சூழல் போராளி முகிலன் விளக்கம்Body:
பொதுமக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராகவும் சுற்று சூழலை பேணிக்காக்க வேண்டும் எனவும் போராடி வரும் முகிலன் மீது கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சீதப்பட்டி பகுதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு தொடுக்கப்பட்டது.இது போல் இன்னும் பல்வேறு வழக்குகளை எதிர் கொண்டு வரும் சமூக போராளி முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இன்று இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் திருச்சி மத்திய சிறையிலிருந்து முகிலனை கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு காவல் துறையினர் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் கோபிநாத் வரும் 19-ம் தேதி முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்திரவிட்டார்.இதனையடுத்து காவல் வாகனத்தில் காவல் துறையினர் பாதுகாப்போடு மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.நீதிமன்றத்திற்கு அழைத்துவப்பட்ட முகிலன் செய்தியாளர்களை பார்த்து கூறும் போது கரூர் மாவட்டத்தில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக கடுமையாக போராடியதின் விளைவாக தற்போது மணல் கொள்ளை கட்டுபடுத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் எனக்கு துணையாக இருந்த காரணத்தினாலும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஐ.ஜி. மற்றும் டி.ஐ.ஜி ஆகியோருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி வெளிப்படுத்த இருந்த விஸ்வநாதன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.இது போன்ற எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் அதனை நாங்கள் சந்திப்போம் என்ற அவர் மண்ணையும் மக்களையும் பாதுகாக்க போராடும் என் மீது தேச துரோக வழக்கை பதிவு செய்யும் அடக்குமுறையை எதிர் கொண்டு தான் இருக்கிறேன்.இதற்க்காக அஞ்சவோ பின் வாங்கவோ மாட்டேன் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.