ETV Bharat / state

செயற்கைக்கோள் உருவாக்கி அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்! - karur

கரூர்: 30 கிராம் எடையுள்ள புதிய செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி அசத்திய கரூர் அரசுப் பள்ளி மாணவர்கள், வரும் 11ஆம் தேதி வாட்டர் சாட்-30 என்கிற செயற்கைக்கோள் மூலம் அதை விண்ணுக்கு அனுப்ப உள்ளனர்.

satellite
author img

By

Published : Aug 8, 2019, 3:10 PM IST

Updated : Aug 8, 2019, 4:28 PM IST

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவியல் ஆய்வகம் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் ஆஃப் இந்தியா இணைந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் சில போட்டிகளை நடத்திவருகின்றன.

இதில் கலந்துகொண்ட கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 5 பேர், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் 30 கிராம் எடையுள்ள வாட்டர் சாட்-30 என்ற புதிய செயற்கைக் கோளை உருவாக்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் தற்போது தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டுவருகின்றனர். நிலத்தில் சுமார் 160 அடி ஆழத்திற்கு சீமைக்கருவேல மரங்களின் வேர்கள் சென்று நீர்மட்டத்தை குறைத்துவருவதால், அவற்றை முற்றிலும் அகற்ற இந்த மாணவர்கள் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டனர். அதனடிப்படையில் சீமைக்கருவேல முட்களின் இலை, காய், பூ, விதை, பட்டை ஆகியவற்றைத் திண்ணமாக மாற்றி அதை 6 அடுக்குகளாக 30 கிராம் எடையுள்ள செயற்கைக்கோள் வடிவமைத்துள்ளனர்.

செயற்கைக்கோள் உருவாக்கி அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்

சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு விண்ணில் இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படும்போது அங்குள்ள தட்பவெப்பநிலை, வளிமண்டல அழுத்தம் சூரிய கதிர்வீச்சு ஆகியவற்றால், விண்ணில் இந்த படிமங்கள் என்ன மாறுபாடு ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க முடியும் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நவீன்குமார், சுகந்த், பசுபதி, ஜெகன், சுகி ஆகிய ஐந்து மாணவர்கள் 30 கிராம் எடையுள்ள புதிய செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கைக்கோள் ஆகஸ்ட் 11ஆம் தேதி பலூன் சாட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது.

Intro:30 கிராம் எடையுள்ள புதிய சேட்டிலைட் கண்டுபிடித்து அசத்திய கரூர் அரசு பள்ளி மாணவர்கள் வருகிற 11-ஆம் தேதி வாட்டர் சாட்-30  என்கின்ற செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பும் நிகழ்வு.Body:
தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவியல் ஆய்வகம் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் ஆப் இந்தியா இணைந்து தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் சில போட்டிகளை நடத்தி வருகிறது 
இதில் கலந்துகொண்ட கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 5 பேர் தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் வகையில், 30 கிராம் எடையுள்ள வாட்டர் சாட் 30 என்கின்ற புதிய செயற்கைக் கோளை தயாரித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது உள்ள பிரச்சனை தண்ணீர், தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நிலத்தில் சுமார் 160 அடி ஆழத்திற்கு  இந்த சீமைக் கருவேல மரங்களின் வேர்கள்  சென்று, நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கு, இந்த சீமைக்கருவேல முட்களும் ஒரு காரணம் என்பதை அறிந்து அந்த சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றிட இந்த மாணவர்கள் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டனர்.

அதனடிப்படையில் சீமைக்கருவேல முட்களின் இலை, காய், பூ, விதை, பட்டை ஆகியவற்றை திண்ணமாக மாற்றி அதை 6 அடுக்குகளாக 30 கிராம் எடையுள்ள சாட்டிலைட் வடிவமைத்துள்ளனர்.

சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு விண்ணில் இந்த சாட்டிலைட்டை ஏவப்படும் போது அங்குள்ள தட்பவெட்பநிலை வளிமண்டல அழுத்தம் சூரிய கதிர்வீச்சு ஆகியவற்றால், விண்ணில் இந்த படிமங்கள் என்ன மாறுபாடு ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப இந்த சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க முடியும்.

கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நவீன் குமார் மற்றும் சுகந்த், பசுபதி, ஜெகன், சுகி, ஆகிய ஐந்து மாணவர்கள் இந்த 30 கிராம் எடையுள்ள புதிய சாட்டிலைட்டை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சேட்டிலைட் வருகிற ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி பலூன் சாட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது.

அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த இந்த புதிய 30 கிராம் சேட்டை கரூர் மாவட்டத்தில் உள்ள பலரும் பாராட்டி உள்ளனர்.
Conclusion:
Last Updated : Aug 8, 2019, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.