தமிழ்நாடு பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்இ சங்கத்தின் சார்பில் கரூர் மாவட்டத்தில் 50 பள்ளிகள் உறுப்பினராக இருந்து வருகின்றன.
தற்பொழுது பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பள்ளி ஆசிரியர்கள் முதல் அடிப்படை ஊழியர்கள் வரை அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்டத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள், ஊழியர்கள் என சுமார் மூன்று ஆயிரம் பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் போது பேசிய நர்சரி மற்றும் பிரைமரி மேல்நிலை மெட்ரிகுலேசன் பள்ளி சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியம், “நர்சரி மற்றும் பிரைமரி மெட்ரிகுலேஷன் ஆசிரியர்களுக்கு நல வாரியம் அமைத்திட வேண்டியும், நர்சரி பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு வாழ்ஊதியம் பத்தாயிரம் வழங்கிட வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் பள்ளியை நிரந்தரமாக்க வேண்டும், பள்ளி பேருந்துகளுக்கு விதிக்கப்படும் வரிகளை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிளாஸ்மா தெரபி மூலமாக கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு உத்தரவு!