கரூர்: கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று (மே.8) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 5 பேர் கொண்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில், மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளது. இதனால், ஊரடங்கு காலத்தில் அதிக விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்களை வாங்கி செல்பவர்களை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் கரூர் மாவட்டத்தில் 26 வழக்குகள் பதிவு செய்யப்படும், 29 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 6 கார்கள், 4 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 3576 மதுபாட்டில்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19 களப்பணியில் 42 விமானப்படை விமானங்கள்!