2019ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று இறுதியில் மதிப்பெண் அடிப்படையில் வெளியேறிய மாணவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மறுபரிசீலனை செய்து வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என மனு அளித்தனர்.
அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாணவர்கள் கூறுகையில், 'நடப்பாண்டில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் பணியிடம் செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
எனவே அனைத்து தகுதி சுற்றுகளிலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட நாங்கள், இறுதிக்கட்டத்தில் மதிப்பெண் அடிப்படையில் வெளியேறி இருக்கின்றோம்.
மேலும் இதுபோன்ற காலகட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டு இதுபோன்று பணியமர்த்தம் செய்திருக்கின்றனர். அதேபோல் எங்களுக்கும், காவலர் பணியில் சேவை செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும்' எனத் தெரிவித்தனர்.