ETV Bharat / state

குழாயடி சண்டையில் பெண் கொலை - கரூரில் பரபரப்பு சம்பவம் - water pumb issue

கரூரில் பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க இடையூறு செய்த கணவன், மனைவியை அரிவாளால் தாக்கியதில் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது குடிநீர் குழாயில் ஏற்பட்ட சண்டை
பொது குடிநீர் குழாயில் ஏற்பட்ட சண்டை
author img

By

Published : Feb 28, 2023, 2:30 PM IST

கரூர்: திருக்காம்புலியூர் பகுதியில் இளங்கோ - பத்மாவதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பிப்.26 ஆம் தேதி (நேற்று) வீட்டிற்கு அருகில் உள்ள பொதுக் குழாயில் பத்மாவதி தனி குழாய் மூலம் தண்ணீரை தனது வீட்டிற்கு ஏற்றியுள்ளார். அதேபோல் பத்மாவதி வீட்டிற்கு எதிரே வசித்து வரும் கார்த்தி என்பவரின் மனைவியும், பொது குழாயில் தண்ணீர் பிடிக்க வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசி வாய் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இருவருக்கு ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து கார்த்தியின் மனைவி, கார்த்தியிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த கார்த்தி, இளங்கோவின் வீட்டிற்கு சென்று, மாநகராட்சி பொதுக் குழாயில் தனியாக வீட்டுக்கு குழாய் மூலம் தண்ணீர் நிரப்புவது தவறு என கூறியுள்ளார். ஆனால் இளங்கோ மற்றும் பத்மாவதி ஆகியோர் கார்த்திக்கிடம் மேலும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி கசாப்பு கடை அரிவாளால் இளங்கோவையும், அவரது மனைவி பத்மாவதியும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இளங்கோவனுக்கு கையிலும், பத்மாவதிக்கு தலையில் பலமாக அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்நிலையில் பலத்த காயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பத்மாவதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிகளவில் ரத்தம் போனதால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இளங்கோவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர காவல் ஆய்வாளர் விதின்குமார் மற்றும் கரூர் நகர காவல்துணை கண்காணிப்பாளர் தேவராஜன் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

மேலும், தப்பி ஓடிய கசாப்பு கடை உரிமையாளர் கார்த்தியை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கைது சிறையில் அடைத்துள்ளனர். தற்போது பொதுக் குழாயில் தனது வீட்டுக்கு குடிநீர் நிரப்பி வந்த பெண்ணுக்கும், எதிர்வீட்டுக்காரருக்கும் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கந்துவட்டி கேட்டு கூலித் தொழிலாளி தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.