கரூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான ஒருநாள் அறிமுகம், பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்றது. இந்த அறிமுக நிகழ்ச்சியை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலை வகித்து தொடங்கிவைத்தார்.
இதற்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார். இதில், அரவக்குறிச்சி, கரூர், தாந்தோணி, க.பரமத்தி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசுகையில், "மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனை ஊராட்சி மன்றத் தலைவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் சேவைக்கான பரிசு நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்களுக்கு தரமான பொருள்களைக் கொண்டு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்" என்றார். மேலும் அறிமுகம் பயிற்சி வகுப்புக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதனை ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் பெற்றுக்கொண்டனர்.
இதையும் படிங்க:
'வாருங்கள் பறவைகளை ஆவணப்படுத்துவோம்' - மதுரை பறவை ஆர்வலர்களின் முயற்சி