ETV Bharat / state

'ஸ்டாலின் பசும்பொன்னில் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்' - mk stalin should apologise

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் நடந்துகொண்ட செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

mk stalin should apologise
'முத்துராமலிங்கத் தேவர் நினைவு இடத்தில் ஸ்டாலின் செய்த காரியத்துக்கு மன்னிப்பு கேட்கவேண்டும்'
author img

By

Published : Oct 31, 2020, 7:25 PM IST

கரூர்: கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செய்ய சென்ற ஸ்டாலினுக்கு திருநீறு கொடுக்கும்போது அவற்றைப் பவுடர்போல கீழே போட்டுள்ளார். இதைக் கண்டித்து நேற்று பாஜக சார்பில் முன்னெடுக்கப்பட்ட #gobackstalin ஹேஸ்டேக் டிரெண்டானது.

ஒரு மிகப் பெரிய தலைவரை அவமதித்தது கண்டிக்கத்தக்கது. உண்மையில் அவருக்கு மரியாதை செய்த கட்சி பாஜகதான். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் தேவரின் நற்பண்புகளைப் பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்காமல் இருட்டடிப்புச் செய்துள்ளன.

திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக எல்லா மதத்தையும் ஒன்றிணைத்துச் செல்லும். ஸ்டாலின், திருமாவளவன் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தின் வாக்குக்காக இதுபோன்று இந்து மக்களை அவமதிக்கிறார்கள். தமிழ்நாடு ஆளுநர் பெரிய அரசியல்வாதி, அவரின் தலைமைப் பண்புக்காக இந்தப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

கந்த சஷ்டி கவசத்தில் ஆரம்பித்து தமிழ்நாடு மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள் என்பதை புரியவைக்க வேல் யாத்திரையை தொடங்க உள்ளோம். வேல் யாத்திரையின்போது முருகனின் ஆறுபடை வீடுகளில் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.

அரசு விதிகளுக்கு உட்பட்டு இந்த யாத்திரை நடைபெறுகிறது. அனுமதி மறுப்பதற்கான வாய்ப்பே இல்லை. முருகப் பெருமானின் உகந்த நாளாக டிசம்பர் 6ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்துள்ளோம். வேல் யாத்திரையால் யாருக்கும் தொந்தரவு இருக்காது" என்றார்.

இதையும் படிங்க: முத்துராமலிங்கம் ஜெயந்தியையொட்டி விபரீத ஆட்டோ வீலிங் - வைரல் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.