ETV Bharat / state

எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம் பலிக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி

author img

By

Published : Jun 1, 2022, 2:00 PM IST

தமிழ்நாட்டை விட குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவாகவே உள்ளது; அதை மறந்தும் மறைத்தும் எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன என்று கரூரில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி
அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், மாவட்ட பொறுப்பாளரும் தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் இன்று (ஜூன் 1) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக மாநில சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கருணாநிதியின் படத்திற்கு மரியாதை: அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, 'கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை நிறுவியதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

இதனடிப்படையில் எதிர்வரும் ஜூன் 3ஆம் தேதி, கருணாநிதி பிறந்த நாளன்று மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், ஒரு மாநகராட்சி, 157 ஊராட்சி என மொத்தம் 222 பகுதிகளில் சுமார் 3,000 இடங்களில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

"திராவிட மாடல்" விளக்கக் கூட்டம்: குறிப்பாக, மாவட்டம் முழுவதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் "திராவிட மாடல்" விளக்கக் கூட்டங்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு உட்பட ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமாக சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ஏற்படுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் விநியோகம் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் தவறான கருத்துகளை பேசி மக்களிடம் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொய்ப் பிரச்சாரம் பலிக்காது: தமிழ்நாட்டில் 6 முதல் 7 நாள்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது. ஆனால், அதைவிடக் குறைவாகவே, குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு உள்ளது. நிலக்கரி கையிருப்பு குறித்து தமிழ்நாட்டை குறைக்கூறும் இயக்கங்கள், தான் ஆளக்கூடிய மாநிலங்களில் நிலக்கரி கையிருப்பு எவ்வளவு உள்ளது. அங்கெல்லாம் மின்வெட்டு எவ்வளவு நேரம் உள்ளது; மின் வினியோகம் எவ்வளவு நேரம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதை மறந்து மறைத்து பேசி வருகின்றனர்.

பொய் பிரச்சாரம் மக்களிடத்தில் எடுபடாது; தமிழ்நாட்டில் தற்போது காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ள தன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இதையும் படிங்க: 'இது நமக்கு புரியாது.. நானே சொல்ரேன்'.. பிரதமர் காணொலியை மியூட் செய்த கதிர் ஆனந்த் எம்பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.