ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை

author img

By

Published : May 17, 2021, 8:34 PM IST

Updated : May 17, 2021, 10:06 PM IST

கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி பவுண்டேஷன் சார்பில் ரூபாய் 21 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 20 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் கருவிகள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, "கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 700 படுக்கைகள் உள்ளன. இவற்றில் தற்பொழுது 300 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. 130 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதி அல்லாத படுக்கைகள் ஆகும்.

தற்பொழுது நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப கூடுதலாக 70 ஐசியூ படுக்கைகள் இன்று (மே.17) புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. 370 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துரித நடவடிக்கையால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பிசிஆர் கருவி இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்மூலம் ஒரு மணி நேரத்திற்கு 96 பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும்.

அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை

தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் மாவட்டத்தில் தினந்தோறும் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையில் தொடங்கிய ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி!

Last Updated : May 17, 2021, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.