கரூர் மாவட்டம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை 13 ஆட்சித்தலைவர்கள் பணி செய்துள்ளனர். தற்பொழுது, கரூர் மாவட்டத்தின் பதினான்காவது மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி கடந்த சில நாள்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று (அக். 30) கரூர் மாவட்ட ஆட்சியராக மலர்விழி பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக கரூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய கார்த்திகா, தருமபுரி மாவட்ட ஆட்சியராகப் பணியிடமாறுதல் செய்யப்பட்டார்.
கரூர் ஆட்சியராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மலர்விழி கூறுகையில், கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய முக்கியப் பிரச்னைகள் தொடர்பாக சீரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்