கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆவாரம் பூ மற்றும் பூலப்பூ போன்ற பூக்கள் சாலையோர மற்றும் கிராமப்புற பகுதிகளில் அதிகமாக பூத்துக் குலுங்குகின்றன.
இந்தப் பூக்களை கரூரில் உள்ள மக்கள் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் ஆவாரம் பூ, பூலப்பூ மற்றும் வேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக இணைத்து வீட்டில் பல்வேறு இடங்களில் காப்பு கட்டி வைப்பது வழக்கமாக உள்ளது.
சாலையோர பகுதியில் பூத்துக்குலுங்கும் இப்பூக்களை பொதுமக்கள், வியாபாரிகள் பறித்துச் செல்கின்றனர். மேலும் நகர்ப்புற பகுதியில் இப்பூக்களை காசு கொடுத்து வாங்கும் அவல நிலையும் உருவாகியுள்ளது.
வேப்பம் பூ, ஆவாரம் பூ, பூலப்பூ போன்றவற்றை ஒன்றாக இணைத்து கட்டு பத்து ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனை பொதுமக்கள் வாங்கி சென்று தங்கள் வீட்டின் வாசலில் காப்பு கட்டி பொங்கல் பண்டிகையை வரவேற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: அகில இந்திய காங்கிரஸ் சார்பாக சமத்துவப் பொங்கல் விழா!