ETV Bharat / state

கரூர் இளநீர் வியாபாரி கொலை வழக்கு - மூன்று பேர் கைது

author img

By

Published : Sep 23, 2020, 5:56 PM IST

கரூர்: இளநீர் விற்பனை செய்யும் இளைஞரை அவரது மனைவி கண் முன்னே அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரை கரூர் நகர காவல்துறையினர் கைது செய்தனர்.

Karur
Karur

கரூர் சின்னாண்டான் கோவில் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு திருமணமாகி சஸ்மிதா என்ற மனைவி உள்ளார். கடந்த 18ஆம் தேதி காலை வழக்கம் போல் கரூர் - கோவை சாலையில் திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் கணவர், மனைவி இருவரும் சேர்ந்து இளநீர் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மனைவி கண் முன்னே கிருஷ்ணமூர்த்தியை கைகள், தலைப் பகுதியில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கிருஷ்ணமூர்த்தியை அவரது மனைவி மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த நிலையில், தனிப்படை அமைத்து கரூர் நகர காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்தக் கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் கோகுல், மணி, துரை பாண்டி ஆகியோர் சிவகங்கை நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர்.

மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய ராமானுஜநகரைச் சார்ந்த தமிழரசன், கடவூர் காளியாபட்டியைச் சார்ந்த அஜீத், காந்தி நகரைச் சார்ந்த கலைச் செல்வன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். ஏரியா பிரச்னை காரணமாகவே இந்தக் கொலை நடந்து இருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.