ETV Bharat / state

புத்தாண்டு தினத்தில் விபரீத ஆசையை நிறைவேற்றிய இளைஞர் - கரூரை உயரத்திலிருந்து பார்க்க ஆசை

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற புத்தாண்டு தினத்தில் 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்ற தொழிலாளியை காவலர்கள் மீட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Karur 40 year old man new year different wish  a man climbed in cell tower at karur  Police warning that man at karur  கரூரில் புத்தாண்டு தினத்தில் விபரீத ஆசையை நிறைவேற்றிய இளைஞர்  கரூரை உயரத்திலிருந்து பார்க்க ஆசை  100 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார்
புத்தாண்டு தினத்தில் விபரீத ஆசையை நிறைவேற்றிய இளைஞர்
author img

By

Published : Jan 2, 2022, 12:35 PM IST

கரூர்: புத்தாண்டு தினத்தன்று புதிதாக ஏதாவது ஒரு கொள்கையை கடைபிடிக்க வேண்டுமென்று ஒவ்வொருவரும் குறிக்கோள்களை நிர்ணயம் செய்வது உண்டு.

அதனடிப்படையில் கரூரில் 100 அடி உயரமுள்ள அலைப்பேசி கோபுரத்தின் மீது ஏறிய நபரை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

100 அடி உயர செல்போன் கோபுரம்

அந்த நபர் கரூர் சின்ன ஆண்டாங்கோயில் சாலையில் உள்ள பழைய இரும்பு கொள்முதல் செய்யும் கடையில் பணியாற்றும் இளங்கோ (44) ஆவார்.

இவருக்கு தாம் பணியாற்றும் இடத்தில் கட்டடத்தின் மேற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கரூர் நகர்ப் பகுதியைப் பார்க்க வேண்டுமென நீண்ட நாள் ஆசை.

அதனைப் புத்தாண்டு தினத்தில் நிறைவேற்றிக்கொள்ள நேற்று (ஜன.10) மாலை 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார்.

காவலர்கள் எச்சரிக்கை

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும் கரூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள், செல்போன் கோபுர உச்சிக்கு ஏறிய தொழிலாளியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாதுகாப்பாக இறங்கினார்

அப்போது திடீரென லேசான மழை வேறு பெய்து மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் அந்தத் தொழிலாளி பாதுகாப்பு செல்போன் கோபுர உச்சியிலிருந்து கீழே இறங்கினார்.

இதையடுத்து அவரை காவலர்கள் எச்சரித்து அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:’பொங்கல் பரிசாக மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்’- மாணிக் தாகூர் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.