கரோனா வைரஸ் (தீநுண்மி) அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து பல்வேறு மக்களும் வேலையிழந்து தவித்துவருகின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ள சாலையோரங்களில் வியாபாரம் செய்துவரும் சுமார் 50 கண்பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அரசின் சார்பில் முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி பொருள்களும், பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் 5 கிலோ அரிசி, தலா அரை கிலோ துவரம் பருப்பு, கோதுமை மாவு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களும் வழங்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, பாரத ஸ்டேட் வங்கி சார்பில் கரூர் மாவட்டத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 தனிநபர் பாதுகாப்பு உடைகளும் வழங்கப்பட்டன. இந்தப் பொருள்களை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கினார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள் வழங்கும் காவல் துறை