அரவக்குறிச்சி திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், தற்போதைய கரூர் திமுக வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் கரூர் தொகுதியில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் அடங்கிய கையேட்டை வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது, “100 வாக்குறுதிகளுக்கு 100 மதிப்பெண்கள் அடிப்படையில், பொதுமக்களும் பத்திரிகையாளர்களும் மதிப்பெண்கள் வழங்கும் வகையில் திட்டக் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
கரூரின் அனைத்து வார்டுகளிலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள், சாலை விரிவாக்கம், இளைஞர் நலன், மேம்பாலங்கள் உள்ளிட்ட 100 வாக்குறுதிகளையும் 5 ஆண்டுக்குள் நிறைவேற்றுவேன். மேலும், திருப்பூர் மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக டெக்ஸ்டைல், பேருந்து கூண்டு கட்டும் தொழில், கொசுவலை என மூன்று பிரதான தொழில்களை கொண்ட கரூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்துவேன்” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இலையில் விசில், எருக்கம் பூ விளையாட்டு' - 90ஸ் கிட்ஸின் உணர்வுகளை தூண்டி விட்ட மன்சூர்