ETV Bharat / state

கள்ளக்குறிச்சி மாணவி மரணம், 4 மாணவர் சங்க நிர்வாகிகள் கைது! - கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்ட 4 மாணவர் சங்க நிர்வாகிகள் கரூரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம், 4 மாணவர் சங்க நிர்வாகிகள் கைது

author img

By

Published : Jul 18, 2022, 8:23 PM IST

கரூர்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின் (RSYF) மாநிலப் பொருளாளரும் சேலம் சட்டக்கல்லூரி மாணவருமான கரூரைச் சேர்ந்த சுரேந்திரன் (25), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ( DYFI) கரூர் மாநகரச்செயலாளர் சிவா(25), இந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட நிர்வாகி ( SFI) தமிழரசன்( 23), சங்கர்(21) ஆகிய 4 மாணவர் சங்க நிர்வாகிகளை இன்று பசுபதிபாளையம் காவல் நிலையப் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல், கூட்டு சதி, கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுரேந்திரன் உள்ளிட்ட நான்கு நபர்களும் தற்போது கரூர் ஜெ.எம் -1 நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனை அடுத்து கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் இயக்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் கூடியதால் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கரூர் மாணவர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாலும், கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதாலும் கரூர் நகர் பகுதி மற்றும் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி ஆகியப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி முன்பு கலவரம்: முதற்கட்டமாக 128 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.