மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவின் அகில பாரதிய வித்யா பரிஷத் தேசிய தலைவர் சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், கரூர் எம்.பி. ஜோதிமணி, "சென்னையில் பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட சுப்பையா சண்முகத்திற்கு இதுபோன்ற பதவி வழங்கப்பட்டது பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. இதேபோன்று பாலக்காடு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவிலும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது கூடுதலாகக் கண்டிக்கத்தக்கது.
பாஜக கட்சியின் உயர் பதவி பொறுப்பு பெற வேண்டுமென்றால் பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொள்பவர்கள் மட்டுமே தகுதியாக வைத்திருப்பார்களா?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், சுப்பையா சண்முகம் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குழுவிற்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குழந்தைத் திருமண முறையை முடிவுக்கு கொண்டுவர முதலமைச்சரின் நடவடிக்கை!