ETV Bharat / state

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு 5 மாநில தேர்தல் வெற்றி முன்னோட்டமாக இருக்கும்” - ஜோதிமணி எம்பி - கரூர் மாவட்ட செய்திகள்

Jothimani MP: பத்து ஆண்டுகாள மோடி ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது எனவும், 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும் என்றும் ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.

jothimani-mp-etv-bharat-special-news
ஜோதிமணி எம்பி பேட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 2:03 PM IST

ஜோதிமணி எம்பி பேட்டி

கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் மணப்பாறை, வேடசந்தூர், விராலிமலை உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வருடாந்திர ஆய்வுப் பணிகளை, கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவர்மலை, மேலப்பகுதி, கீழப்பகுதி, மாவத்தூர், பாலவிடுதி, முள்ளிப்பாடி ஆகிய ஊராட்சி பகுதிகளில் நேற்று (அக் 21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, முள்ளிப்பாடி ஊராட்சியில் உள்ள செங்காடு பகுதியில் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களைச் சந்தித்து பல்வேறு குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு சிறப்பு பேட்டி அளித்த ஜோதிமணி எம்பி பேசுகையில், “வருடத்தில் 5 மாதங்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களைச் சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டு அறிவது வழக்கம்.

100 வேலைத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படுவதில்லை. இவைதான் மக்களின் குறைகளாக இருந்து வருகிறது. இத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் தனியாக வசிக்கும் முதியவர்கள் மற்றும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு கடந்த 10 வாரங்களாக மத்திய அரசு திட்டப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்காமல், மத்திய அரசு காலதாமதப்படுத்தி வருகிறது.

இதனால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் ஆய்வில், அனைத்து தொகுதிகளிலும் 60 சதவீத அளவிற்கு ஆய்வுப் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 40 சதவீத ஆய்வுப் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பத்து ஆண்டுகளாக நரேந்திர மோடி ஆட்சியில் விலைவாசி உயர்வு, குறிப்பாக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை பார்க்க முடிகிறது.

இந்த மாதிரியான சூழ்நிலையில், தமிழக அரசு இல்லத்தரசிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கி உள்ளது. காலையில் குழந்தைகளுக்கு சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக முதலமைச்சரின் இந்த இரண்டு திட்டங்கள் மிகப்பெரிய ஆதரவை பொதுமக்கள் மத்தியில் இருப்பதை களத்தில் அறிந்து கொள்ள முடிகிறது.

5 மாநிலத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற உள்ளது. காரணம், பத்து ஆண்டு கால நரேந்திர மோடி ஆட்சியில் மக்கள் வெறுப்பில் உள்ளனர். யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத விலைவாசி உயர்வு, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல நிதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

மக்கள் விரோத அரசாக மத்தியில் ஆளும் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. நிச்சயமாக 5 மாநில பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான ஆதரவு அளிக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. இந்தியா கூட்டணிக்கு பல மாநிலங்களில் ஆதரவளித்துள்ளனர். எதிர் வரும் மக்களவைத் தேர்தலுக்கு ஐந்து மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வெற்றி ஒரு முன்னோட்டமாக இருக்கும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: முகமது நபி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட எம்.எல்.ஏவின் இடைநீக்கம் ரத்து! தெலங்கானா தேர்தலையொட்டி பாஜக சூட்சமம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.