கரூர் மாவட்டம் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்நகர நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இதைத்தொடர்ந்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கரூர் மாவட்டச் செயலாளர் வி.கே துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் 18 தொகுதியில்தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர்களுக்கு ஆதரவை தெரிவிக்கின்றோம். எங்களை மரியாதையுடன் அழைத்தால்தேர்தல் பணியாற்றத் தயார்" என்றார்.
