கரூரில் உள்ள இந்துஸ்தான் சாரணர் அமைப்பு மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடையே கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் நிர்வாகிகள், கரோனா வைரஸின் மாதிரி உருவத்தை ஹெல்மெட்டில் அமைத்து அதனை அணிந்தவாறு பொது இடங்கள், மக்கள் கூடும் மருந்தகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.
மேலும் மக்களுக்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கிருமி நாசினி, முகக் கவசங்களை இலவசமாக வழங்கினர். வீட்டில் தனித்திருந்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். சாரணர் அமைப்பின் இந்த விழிப்புணர்வு பணியில் 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க... மயிலாடுதுறையில் கரோனா ஓவியம்: தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினர் விழிப்புணர்வு