ETV Bharat / state

காவிரிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - flood warning for cauvery belt people karur collector said

கரூர்: மேட்டூர் அணையிலிருந்து 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

flood-warning-for-cauvery-belt-people-karur-collector-said
author img

By

Published : Sep 26, 2019, 7:22 AM IST

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவருவதால் மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை நிலவரப்படி 40ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால் காவிரி ஆற்றின் கரையோரங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து பொதுமக்களுக்கு தண்டோரா, ஒலிப்பெருக்கி வாயிலாக அறிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. இதனால் காவிரி ஆற்றின் கரையோரங்களில் இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் என யாரும் ஆற்றில் இறங்கி குளிப்பதையோ புகைப்படம் எடுப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

flood warning for cauvery belt  people karur collector said
கரூர் மாவட்ட ஆட்சியர்

மேலும், கரையோரம் உள்ள மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் உடமைகள், கால்நடைகளுடன் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெள்ளம், பேரிடரை எதிர்கொள்ள பிரிட்டனுடன் பயிற்சி முகாம் - அமைச்சர் உதயகுமார்.

Intro:மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - காவிரி ஆற்றின் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் அறிவுறுத்தல்Body:மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - காவிரி ஆற்றின் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் அறிவுறுத்தல்

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே, காவிரி ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும்தங்கள் உடைமைகளையும் கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காவிரி ஆற்றின் கரையோரங்களில் இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என யாரும் ஆற்றில் இறங்கி குளிப்பதையோ, புகைப்படம் எடுப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றின் கரையோர அனைத்து பகுதிகளிலும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மற்றும் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து பொதுமக்களுக்கு தண்டோரா மூலமும், ஒலிபெருக்கி வாயிலாகவும் அறிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல
வேண்டும் என்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.