ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்றைய மஞ்சள் விலை, விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு நேற்றைய விலை விட 346 ரூபாய் குறைந்தும், கிழங்கு மஞ்சள் நேற்றைய விலையை விட குவிண்டால் ஒன்றுக்கு ரூ.460 அதிகரித்தும் விலை சென்றது.
மே 9 ஆம் தேதி விராலி மஞ்சள் குறைந்தபட்ச விலை ரூ.5,888 - குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலை ரூ.8,013 வரை ஏலம் சென்றது. ஆனால் இன்று(மே.10) குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,896 அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,667க்கு மட்டுமே ஏலம் சென்றது.
இது நேற்றைய (மே.09) விலையை விட ரூபாய் 346 ரூபாய் குறைந்து ஏலம் சென்றது. இதேபோல இன்று கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலை ரூ.5,389க்கும் அதிகபட்ச விலை ரூ.6,569 வரை விலை சென்றது. இது நேற்றைய விலையை விட ரூபாய் 460 அதிகமாக விலைக்கு ஏலமாக சென்றது.
ஈரோடு ஒழுங்கு முறை மஞ்சள் கூடத்தில் விராலி மஞ்சள் விலை ரூ.346 குறைந்தும், கிழங்கு மஞ்சள் விலை ரூ.460 அதிகரித்து இன்று காணப்பட்டது. மொத்தமாக 1604 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், 655 மஞ்சள் மூட்டைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.
இதையும் படிங்க: இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயரும்!