கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் நேற்று (ஏப்.16) கரூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தேர்தல் அலுவலருமான பிரசாந்த் மு வடநேரேவிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில், “கரூர் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது கூடுதல் அறை ஒதுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கரூர் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் காளியப்பன், “கரூர், தளவாபாளையம், குமாரசாமி பொறியியல் கல்லூரியிலுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரண்டு அறைகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக ஒரு அறை ஒதுக்கீடு செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளோம். மாவட்ட ஆட்சியரும் அதனை பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார்” என்றார்.
இதையும் படிங்க: கப்பல் படகு மீது மோதி விபத்து; தூத்துக்குடி மீனவரை மீட்டுத் தரக்கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு