ETV Bharat / state

கரூரில் பட்டியல் இன குடும்பத்தினரை மண்டியிடவைத்து தாக்குதல் - ஒருவர் கைது - ஈடிவி பாரத் தமிழுக்கு பேட்டி

21ஆம் நூற்றாண்டில் நாகரிகத்தில் வளர்ச்சியடைந்து வரும் நம்முடைய மனித சமூகம் எப்படியெல்லாம் தனது சகமனிதனை கீழான ஒன்றாகக் கருதும் மனநிலைக்கு சென்றிருப்பதை கீழ்க்கண்ட சம்பவம் உணர்த்துகிறது.

எட்டிதுரை
எட்டிதுரை
author img

By

Published : Mar 9, 2022, 8:17 PM IST

கரூர்: கர்ப்பிணி மனைவியின் கண்முன்னே கணவரையும் குடும்பத்தாரையும் நடுரோட்டில் வைத்து பண்ணையாரும் அவரது அடியாட்களும் மண்டியிட வைத்து, அடித்து உதைத்த சம்பவம் ஒரு வாரத்திற்குப் பிறகு கரூரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நாய்க்காக மனிதனை துன்புறுத்துவதா?

கடவூர் தாலுகாவின் பூசாரிபட்டியில் பட்டியல் இன அருந்ததியர் வகுப்பைச்சேர்ந்த தம்பதியினர் காளியப்பன் (57), முத்தம்மாள் (55). இவரது மகன்கள் எட்டிதுரை (23), கார்த்திக் (31) ஆகியோர் அதே பகுதியிலுள்ள குமரேசக் கவுண்டர் பண்ணையாரின் தோட்டத்தில் 3ஆண்டுகளாக பண்ணை வேலையாட்களாக இருந்து வந்துள்ளனர்.

கடந்த பிப்.28ஆம் தேதி, பண்ணையாரின் தோட்டத்தில் வளர்த்த வேட்டை நாய் ஒன்று காணாமல் போனது. இது பற்றி விசாரிக்கவேண்டும் என்று பூசாரிபட்டியின் பொதுஇடமான அரசு பள்ளிக்கூடம் முன்பு, எட்டிதுரையை மண்டியிட வைத்து, அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

கர்ப்பிணி மீது தாக்குதல்

அவரை மீட்க வந்த அண்ணன் கார்த்திக் மற்றும் அவரது 7 மாத கர்ப்பிணி மனைவி தமிழ்ச்செல்வி (21) ஆகிய இருவரையும் 10-க்கும் மேலான கும்பல் சரமாரியாக இரக்கமின்றி தாக்கியுள்ளனர்.

கர்ப்பிணி என்றும் பாராமல், மனிதாபிமானமற்ற முறையில் மூர்க்கத்தனமாக வயிற்றில் எட்டி உதைத்ததில், வலி ஏற்பட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழ்ச்செல்வி அனுமதிக்கப்பட்டார்.

பூட்ஸ் காலால் மிதித்தார்

இதுகுறித்து முத்தம்மாள், காவல்துறை அவசர உதவி எண் - 100-க்கு அழைத்து உதவிகோரியபின், அங்குவந்த பாலவிடுதி காவல்துறையினரும் குமரேசக் கவுண்டருக்கு ஆதரவாக அழைத்துச்சென்று, எட்டிதுரையை விடிய விடிய துன்புறுத்தியுள்ளனர். அங்கு எட்டிதுரையை, 'குற்றத்தை நீயே ஒப்புக்கொள்' என்று பாலவிடுதி காவல் உதவி ஆய்வாளர் ராமசாமி பலமுறை அவரது பூட்ஸ் காலால் உதைத்து நிர்பந்தம் செய்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த எட்டிதுரை(23)

இதனால், காயமடைந்த எட்டிதுரையை, ஆதித்தமிழர் பேரவையின் கரூர் மாவட்டச் செயலாளர் பாரதி என்பவர் காவல் நிலையத்திலிருந்து மீட்டு கடந்த மார்ச் 2ஆம் தேதி, காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

எட்டிதுரை வாக்குமூலம்

மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச்சென்ற தமிழ்ச்செல்வி நடந்தவை குறித்து அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுத்துவிட்டதாக, மார்ச் 6ஆம் தேதி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட எட்டிதுரை கூறுகையில், 'சம்பவத்தன்று குமரேசக் கவுண்டரது நண்பர்கள் என்னை சூழ்ந்து சரமாரியாகத் தாக்கினர். அதனைத் தடுக்க வந்த எனது குடும்பத்தார் அனைவரையும் தாக்கி சித்திரவதை செய்தனர்.

அந்த ஊரில் பட்டியல் இன இரண்டு குடும்பங்கள் மட்டுமே வசிப்பதால் யாரும் காப்பாற்றுவதற்கு முன் வரவில்லை. செல்மூலம் காவல்துறை அவசர எண்ணுக்கு உதவிகோரிய, எனது தாய் முத்தம்மாள் மூலம் பாலவிடுதி காவல்நிலையத்தில் அழைத்துவரப்பட்டு இரவு முழுவதும் காவல் நிலையத்தில் குளிரும் பனியில் அமரவைக்கப்பட்டேன்.

உதவிஆய்வாளர் ராமசாமி வேட்டை நாயைத் திருடியதை ஒப்புக் கொள் என்று கூறி பூட்ஸ் காலால் எட்டி உதைத்து தாக்கினார். அதில் மயங்கி விழுந்த நான், கால் வலியுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறேன்' எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழுக்கு பேட்டி

ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பசுபதி, ஈடிவி பாரத் தமிழ் செய்திக்கு அளித்த பேட்டியில், 'அவசர உதவிகோரி மீட்கப்பட்ட ஒருவரை காவல் நிலையத்தில், சித்திரவதைக்கு உள்ளாக்கிய பாலவிடுதி காவல் உதவி ஆய்வாளர் ராமசாமி மீது தமிழ்நாடு முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரின் குமுறல்

நடுநிலை தவறும் காவல்துறை

பாதிக்கப்பட்டவர் மீட்கப்படவில்லை எனில், சாத்தான்குளம் காவல் நிலைய சித்திரவதையைப் போல, காவல் நிலையத்தில் பெரிய அசம்பாவித சம்பவம் நடந்து இருக்கும். கரூர் மாவட்டத்தில் சாயப்பட்டறை, கொசுவலை, செங்கல் சூளை, விவசாயப் பண்ணை ஆகியவற்றில் கொத்தடிமைகளாக வேலை செய்வோரை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

மாவட்டத்தில் பட்டியல் இனத்தவர் மீது இதுபோன்ற வன்கொடுமைகளை நிகழ்த்தும் ஆதிக்க சமூகத்தின் மீதும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில், மாநிலம் தழுவிய அளவில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடத்துவோம்' எனத் தெரிவித்தார்.

டிஎஸ்பி ஸ்ரீதர் நடவடிக்கை

இதனிடையே குளித்தலை சரக டிஎஸ்பி ஸ்ரீதர் நடத்திய விசாரணையில் சம்பவம் நடைபெற்றதை உறுதி செய்து, எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ், பாலவிடுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ததுடன் பண்ணையார் குமரேசக் கவுண்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருடன் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய, முருகேசன் மல்லான், விக்கி ஆகியோரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

பாதுகாப்பு கோரிக்கை

கணவனைக் காப்பாற்றச் சென்ற கர்ப்பிணி, தன்னைத் தாக்கிய ஈவு இரக்கமற்ற கும்பலிடம் இருந்து, தன் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு கேட்டு திருச்சி காவல் சரகத் தலைவரிடம் மனு அளித்துள்ளார்.

21ஆம் நூற்றாண்டில் மீண்டும் பண்ணையார்களின் ஆதிக்கதால் ஒரு குடும்பமே பாதிக்கப்பட்டு நீதி கேட்டு, அதற்காகப் போராடி வருவது நவீன டிஜிட்டல் இந்தியா பற்றி பேசிவரும் நம் நாட்டில் சமூகத்திற்குள் சாதியத்தின் தொற்று இன்னும் மறையவில்லை என்பதை நமக்கு இன்னும் வெளிச்சமிட்டுக் காட்டிக்கொண்டே தான் உள்ளது.

இதையும் படிங்க: உ.பியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேசத்திற்கே கேடு விளைவிக்கும் - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.