ETV Bharat / state

ரூ.81.41 கோடி மதிப்புள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 64,320 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.81.41கோடி மதிப்புள்ள கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

author img

By

Published : Jan 23, 2022, 8:15 AM IST

கரூர் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சி மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் புதிய குடிநீர் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜனவரி 22) காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டப் பகுதிகளில் உள்ள 274 குடியிருப்புகளுக்காக 64,320 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.81.41 கோடி மதிப்புள்ள கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

இத்திட்டத்தின் மூலம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மணவாடி, ஏழூர்,வெள்ளியணை,ஜெகதாபி, மூக்காணங்குறிச்சி, கே. பிச்சம்பட்டி, புத்தாம்பூர் உள்ளிட்ட 13 ஊராட்சிகளில் உள்ள 274 குடியிருப்புகளைச்சேர்ந்த 64,320 குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் அளவிலான குடிநீர் வழங்கும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்தில் மேலமாயனூர் அருகே நீர் சேகரிப்பு கிணறு மூலம் தேவையான நீர் 400 மி.மீ அளவுள்ள குழாய்கள் மூலம் 19,528 மீட்டர் தொலைவில் உள்ள புதிதாய் கட்டப்பட்ட 14.60 லட்சம் லிட்டர் கொள்ளவுள்ள பெருமாள்பட்டி தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் கட்டளையில் பயன்பாட்டிலுள்ள ஓர் நீர் உறிஞ்சி கிணறு மூலம் சேமிக்கப்படுகின்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

பின்னர், தேவையான நீர் ஏற்கெனவே பயன்பாட்டிலுள்ள 3.15 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள ஏமூர்புதூர் தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு 225 மி.மீ அளவிலான குழாய்கள் மூலம் குடிநீர் ஏற்றப்படுகிறது.

இத்திட்டத்தில் மொத்தம் 25 தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலமும் பயன்பாட்டிலுள்ள 292 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் புதியதாய் கட்டப்பட்ட 43 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளில் நீர் ஏற்றப்பட்டு ஏற்கெனவே 14,500 மீட்டர் தொலைவிற்குப் பகிர்மானக் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெற உள்ளது.

ரூ.81.41கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டப்பணி
ரூ.81.41 கோடி மதிப்புள்ள கூட்டுக்குடிநீர் திட்டப்பணி

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் கடந்த ஆண்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

இதன் மூலம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் சீரான குடிநீர் விநியோகம் சுமார் 1,06,924 குடியிருப்புகளுக்கும் 100 விழுக்காடு காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு, கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

திமுக சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளின் படி, கரூர் மாவட்டத்தில் கோடைக் காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் கிராமங்களைக் கண்டறிந்து சிறப்புக் கூட்டுக் கூட்டு குடிநீர் திட்டங்கள் தொடர்ந்து தேவையின் பொருட்டு செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மணவாடி பெருமாள்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி மணவாடி ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி, தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் சிவகாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய கண்காணிப்பு பொறியாளர் முரளி, செயற்பொறியாளர் பிரபுராம், உதவி பொறியாளர் யோகராஜ், மணவாடி ஊராட்சி மன்றத்தலைவர் கந்தசாமி, வெள்ளியணை ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.

மணவாடி ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர் வழங்கப்படுவதற்கான நீரேற்று நிலையத்தினை நேரில் பார்வையிட்டு, குடிநீர் வழங்கக்கூடிய மின்மோட்டார்களை இயக்கி தொடக்கி வைத்தார்கள்.

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, நீரேற்று நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்கள்.

இதையும் படிங்க: தண்ணீர் தரமாட்டோம் என்பது எந்தவிதமான மனிதாபிமானம்- கர்நாடக அரசுக்கு துரைமுருகன் கேள்வி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.