குழந்தைகள், வளரிளம் பருவத்தினரைப் பணியில் ஈடுபடுத்துவதைத் தடுத்தல், முறைப்படுத்துதல், குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு அரசு விடுமுறை என்பதால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம். லியாகத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஷாஜகான் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சோளிங்கர் மலைக்கோயிலில் ரோப் கார் பணி இந்தாண்டு முடிக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு