கரூர் மாவட்ட அமமுக சார்பில் 103ஆவது எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட செயலாளர் பிஎஸ்என் தங்கவேல் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக அமமுக மாநில துணைத் தலைவர் எஸ். அன்பழகன் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் ஆர்.எம். தியாகராஜன், கரூர் மாவட்ட அவைத்தலைவர் ஆரியூர் சுப்பிரமணியன், கரூர் மாவட்ட துணை செயலாளர் பெரியண்ணன், நகரக் கழகச் செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், மகளிர் அணி செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து கடவூர், குளித்தலை ஒன்றியங்களிலிருந்து திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட மாற்றுக்கட்சியில் இருந்து இளைஞர்கள் அமமுகவில் இணைந்தனர்.
இதையும் படிங்க:ராமநாதபுரத்தில் இளைஞர்களிடம் நூதன மோசடி