ETV Bharat / state

அரசின் அனைத்து சேவைகளும் இனி இ சேவை மையங்களில் கிடைக்க ஏற்பாடு... - Karur District Collector Office Complex

தமிழ்நாட்டு அரசின் அனைத்து சேவைகளும் இனி இ-சேவை மையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 21, 2022, 12:24 PM IST

கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மின்- அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார்.

நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "தமிழக அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் காகிதம் இல்லா அரசு சேவை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு மூன்று இலக்குகளை மையமாக வைத்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை மூலம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

இவற்றில், பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்துவதற்கும், அரசின் திட்டங்கள் எளிதாக மக்களைக் கொண்டு சேர்ப்பதற்கும், இ- சேவை அனைத்து துறைகளுக்கும் நடைமுறைப்படுத்துவதற்கு 2.0 என்னும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சில துறைகளில் தொழில் நுட்ப கோளாறு அடிக்கடி ஏற்படுவதை கருத்தில் கொண்டு, அதனை மிக விரைவாக தீர்ப்பதற்கு தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

அமைச்சர் மனோ தங்கராஜ்

அரசு திட்டங்களுக்கு தகுதியான பொதுமக்களை தேர்ந்தெடுக்க இ-அலுவலகம் பெருமளவு பயன்படும். தமிழகத்தில் கிராமங்கள் தோறும் விரைவில் பைபர் நெட் சேவை தொடங்கப்படும். ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட கால வரையறைக்குள் பைபர் நெட் சேவை வழங்கப்படும். இ - சேவை மையங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைன் சேவைகள் மூலமாக தமிழகத்தில் மாவட்டம் தோறும் 35 டன் அளவிற்கு காகித பயன்பாட்டை குறைக்க முடியும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பத்திர பதிவு அலுவலகத்தில் சர்வர் செயல்பாடு மோசமாக இருப்பது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு, ஏற்கனவே ஒரு மாவட்டத்தில் இதேபோல குறைகள் காணப்பட்டுள்ளது. விரைவில் தமிழக முழுவதும் ஒருங்கிணைத்து இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்" என்றார்.

இதையும் படிங்க: 2,50,000 புத்தகங்கள்.... மதுரையில் பிரமாண்டமாக தயாராகும் கலைஞர் நூலகம்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.