ETV Bharat / state

லவ் டாச்சர் செய்த இளைஞர் - தற்கொலை செய்த இளம்பெண் - லவ் டாச்சர் செய்த இளைஞர்

கன்னியாகுமரியில் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்துவந்த இளைஞரால், பாதிக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

லவ் டாச்சர் செய்த இளைஞர்
லவ் டாச்சர் செய்த இளைஞர்
author img

By

Published : Aug 11, 2022, 8:13 PM IST

கன்னியாகுமரி: சூழிகோணம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர், குமரிமாவட்டத்தைச் சார்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காதலை தொடராமல் அப்பெண் ரஞ்சித்தை பிரேக்கப் செய்துள்ளார். ஆனாலும் ரஞ்சித் செல்போன் மூலம் அழைத்தும், செல்லும் வழியெல்லாம் பின்தொடர்ந்து சென்றும் டார்ச்சர் செய்துவந்துள்ளார். மேலும் ரஞ்சித் தன்னிடம் இருவரும் சேர்ந்து காதல் ஜோடி போல் இருப்பது போன்ற புகைப்படங்கள் இருப்பதாகவும்; அவற்றை இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் பதிவிட்டு உன் வாழ்க்கையை கெடுக்கப்போவதாகவும் கூறி, இளம்பெண்ணிடம் டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ரஞ்சித்தின் டார்ச்சர் தொடரவே இது சம்பந்தமாக குழித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இரண்டு தரப்பும் சமரசமாகப் பேசி சென்றுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கடந்த வாரம் பெண்ணை, ரஞ்சித் பின்தொடரவே ஆத்திரமடைந்த அப்பெண்ணின் சகோதரன் அவரது நண்பர்களுடன் சென்று தட்டி கேட்டுள்ளார்.

அப்போது இளம்பெண்ணின் சகோதரன் மற்றும் அவரது நண்பர்களை ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மனமுடைந்து காணபட்ட இளம்பெண் நேற்று (ஆக. 10) வீட்டில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த மார்த்தாண்டம் காவல் துறையினர் இளம்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ’இளம்பெண்ணின் இறப்பிற்குக் காரணமான நபரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்’ என உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும் அப்பெண்ணின் செல்போனை கைப்பற்றிய காவல் துறையினர் அதன் மூலம் அப்பெண்ணின் வீட்டின் அருகில் வசிக்கும் 19 வயது இளைஞரை கைது செய்தனர். இது சம்பந்தமாக இளம்பெண்ணின் பெற்றோர், மகள் மரணத்திற்கு காரணமான ரஞ்சித் உள்பட அவரது நண்பர்களை கைது செய்வதற்குப் பதிலாக, தங்களுக்கு பல உதவிகள் செய்து வந்த இளைஞரை கைது செய்து, வழக்கை திசை திருப்ப முயன்று வருவதாக காவல் துறையினர் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: சிறுமியை ஏமாற்றிப்பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.