ETV Bharat / state

அரசு, தனியார் மருத்துவமனையில் எலிக்காய்ச்சலுக்கு வெறிநாய்கடி சிகிச்சை சர்ச்சை.. குமரி பெற்றோர் பரபரப்பு புகார்!

நாகர்கோவிலில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட மூன்று வயது ஆண் குழந்தைக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எலிக்காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு வெறி நாய்கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

wrong treatment
வெறிநாய்க்கடி சிகிச்சை
author img

By

Published : Aug 14, 2023, 11:21 AM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் அடுத்த தேரை கால் புதூர் பகுதியை சேர்ந்தவர் தனிஷ் - சைனி ஆகிய தம்பதிகளுக்கு இரண்டாவதாக, மூன்று வயது ஆண் குழந்தை உள்ளது. சில தினங்களுக்கு முன்பு, காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதால், உடனே நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு மருத்துவரின் பரிந்துரையை ஏற்று குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில், அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.

அப்போது, தவறுதலாக வெறி நாய்க்கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தை உடம்பில் எந்த ஒரு காயமும் இல்லாததால் பெற்றோரும், இதனை உறுதிப்படுத்த முடியாமல் இருந்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இது வெறி நாய்க்கடிக்கான அறிகுறிகள் தான் என உறுதி அளித்து, குழந்தைக்கு மேல் சிகிச்சை தேவைப்படுவதால், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் எந்த பரிசோதனைகளும் மேற்கொள்ளாமல் ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் அளித்த அறிக்கையின்படி, வெறி நாய்க்கடிக்கான மருத்துவத்தை ஆரம்பித்துள்ளனர். மேலும், குழந்தையின் உடல் மோசமாக இருந்ததால் உடனே நேரடியாக தனிமைப்படுத்தி வெறி நாய்க்கடிக்கான தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தை பிழைப்பது கடினம் என்றும் ஒரு கட்டத்தில் குழந்தை இறந்துவிட்டதாகவும், மருத்துவர்கள் மாறி மாறி தகவல் தெரிவித்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் குழந்தையை பெற்றோர் பார்த்தபோது உடலில் அசைவு இருந்துள்ளது. பின்னர் குழந்தையை கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.

அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்த போது குழந்தைக்கு வெறிநாய் கடிக்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் வெறி நாய்க்கடித்தற்கான எந்த விதமான தடையமோ, அறிகுறிகளோ குழந்தையின் உடம்பில் இல்லை என்பதை ஆய்வு செய்து கேரள மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு ‘எலிக்காய்ச்சல்’ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குழந்தை படிப்படியாக முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளனர். நாகர்கோவிலில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குழந்தைக்கு சரியான பரிசோதனை செய்யாமலேயே வெறி நாய்க்கடிக்காமலேயே, வெறி நாய்க்கடித்ததற்கான சிகிச்சை அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், "தங்களது குழந்தையை பரிசோதிக்காமலே, தவறான சிகிச்சை அளித்தன் மூலம், தனியார் மற்றும் அரசு மருத்துவமனை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"பாஜகவுடன் கூட்டணி சேர நலம் விரும்பிகள் ஆசை.. ஆனால் ஒருபோதும் நடக்காது" - சரத் பவார் சூசகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.