ETV Bharat / state

கடலில் கலக்கும் லாட்ஜிகளின் கழிவு - அதிகாரிகள் திடீர் ஆய்வு!

author img

By

Published : Mar 8, 2020, 12:26 PM IST

கன்னியாகுமரி: லாட்ஜிகளில் இருந்து கடலில் நேரடியாக மனிதக் கழிவு மற்றும் சாக்கடை கலப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் அவற்றை உடைத்து சிமெண்ட் கலவையால் அடைத்தனர்.

ஓடைகளை உடைக்கும் காட்சி
ஓடைகளை உடைக்கும் காட்சி

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ் மற்றும் ஹோட்டல்களிலுள்ள மனிதக் கழிவுகள் மற்றும் சாக்கடை நீர், கடந்த 35 ஆண்டுகளாக ரட்சகர் தெரு பகுதி வழியாக கடலில் கலந்து, சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தி வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

கடலில் கழிவு நீர் கலப்பால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால், அவற்றை சரி செய்யவேண்டும் என்று மீனவ மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.

செய்தியாளர்களை சந்திக்கும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன்.

இந்த நிலையில், கடலில் மனிதக் கழிவுகள் மற்றும் சாக்கடை கலப்பதை கண்டித்து, கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தை மீனவ மக்கள் முற்றுகையிட்டு கடந்த சிலநாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், கன்னியாகுமரி ரதவீதியில் உள்ள லாட்ஜுகளில் இருந்து கடலுக்கு கழிவுநீர் செல்லும் ஓடைகளை ஆய்வு செய்த அதிகாரிகள், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் தலைமையில் குமரி மாவட்ட பேரூராட்சிகளின் 10 செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கன்னியாகுமரி தெற்கு ரதவீதியில் உள்ள லாட்ஜின் கழிவுநீர் ஓடையின் குழாய்களை ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து ஆய்வு நடத்தினர்.

அப்போது பல லாட்ஜுகள், ஹோட்டல்களிலிருந்து வெளிவரும் மனிதக் கழிவுகள் ஓடைகளில் கலக்கும் பகுதிகளை கண்டுபிடித்து, அவைகளை உடைத்து காங்கிரீட்டு கொண்டு அடைத்தனர். இதனால் கன்னியாகுமரியில் பரபரப்பு ஏற்பட்டது.

அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க கன்னியாகுமரி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பேரூராட்சி நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைகளால் மீனவ மக்கள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: வேலூரில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.